தாயுடன் சென்ற 8 வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்
மாத்தறையில் (Matara) முச்சக்கரவண்டியில் பயணித்த 8 வயது குழந்தையொன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது.
மாத்தறை, தங்காலை பிரதான வீதியின் உடதெனிய பகுதியில் நேற்று (04) காலை டிப்பர் வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியின் பின் இருக்கையில் பயணித்த தாய் மற்றும் அவரது மகன் ஆகியோர் படுகாயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்பின்னர் துரதிர்ஷ்டவசமாக 8 வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் கைது
இந்த விபத்தில் படுகாயமடைந்த பெண் தங்காலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் முச்சக்கர வண்டி சாரதி வைத்தியசாலையை விட்டு வெளியேறிய நிலையில் பொலிஸாரரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திக்வெல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
