கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மாபெரும் பேரழிவு - சஜித் எச்சரிக்கை
அரசின் கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டமூலம் மிகப் பெரிய பேரழிவு ஆகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் இந்தச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தனியார் ஊடகமொன்றின் அரசியல் நிகழ்வில் கலந்து கொண்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுக நகரம் உலகின் புகழ்பெற்ற மையமாக மாற்றப்பட வேண்டும்.
இதற்கிடையில், நாட்டின் நலன்களைப் பாதுகாக்கும் 'ஸ்மார்ட்' வெளியுறவுக் கொள்கையை இலங்கை கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
