ஜனாதிபதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பியுள்ள கடிதம்
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 2021 ஜனவரி 12 முதல் இன்று வரை 232 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க ஒரு நேர்மையான மனிதராகவும், உண்மையைப் பேசும் மனிதராகவும் கருதப்படுகிறார்.
அவர் அரசியலில் அல்லது வேறு எந்த முறைகேடு அல்லது ஊழலிலும் ஈடுபடவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.
அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், சிரேஷ்ட கலைஞர்கள், சட்ட அறிஞர்கள், பொது மக்கள் மற்றும் பலர் அவரை விடுவிப்பதில் தலையிடுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் இது போன்ற பல கோரிக்கைகளும் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. குறித்த தரப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக என்னிடமும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.