சம்பிக்கவை கூட்டணியில் இணைக்க சஜித் அணி திட்டம்
குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை தமது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி(Samagi Jana Balawegaya) முயற்சித்து வருகின்றது.
இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்று அறியமுடிகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை வகிக்கும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அக்கட்சியில் இருந்து விரைவில் வெளியேறத் திட்டமிட்டுள்ளார்.
பௌத்த வாக்கு வங்கி
ராஜித சேனாரத்னவும் ரணிலை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே உள்ளார். இந்நிலையிலேயே, இவ்விருவரின் இடைவெளியை நிரப்பும் வகையிலும், சிங்கள, பௌத்த வாக்கு வங்கியைக் குறிவைத்தும் சம்பிக்க ரணவக்கவுக்கு சஜித் தரப்பு வலைவிரித்துள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி பட்டியலின் கீழ்தான் சம்பிக்க ரணவக்க போட்டியிட்டார். அதன்பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறி, புதிய கட்சியை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |