முல்லைத்தீவில் இளைஞர் ஒருவரை தாக்கிய குழு கனடாவிற்கு தப்பியோட்டம்
முல்லைத்தீவு (Mullaitivu) - வற்றாப்பளை பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்த குழுவொன்று வீட்டிலிருந்த இளைஞன் மீது தாக்குதல் நடத்திவிட்டு கனடாவிற்கு (Canada) தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தாக்குதல் சம்பவமானது, இன்று (08.06.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வற்றாப்பளை பகுதியில் வீட்டின் முன்பாக தாயுடன் நின்றிருந்த குழந்தை மீது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் மோதியதில் குழந்தை காயமடைந்த விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
விபத்து சம்பவம்
இதனைத்தொடர்ந்து, விபத்திற்குள்ளான குறித்த குழந்தை வீட்டாருக்கும் விபத்தினை ஏற்படுத்தியதாக கூறப்படும் கனடா நாட்டிலிருந்து வருகை தந்திருந்த நபருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்திற்கு பலிவாங்கும் நோக்கில் இன்று அதிகாலை 1 மணியளவில் வெளிநாட்டிலிருந்து வந்த நபர் குழுவொன்றுடன் சென்று வீட்டிலுள்ள இளைஞனை தாக்கி விட்டு தப்பித்துசென்றுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் வருகை தந்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை வைத்து முள்ளியவளை பொலிஸாருடன் சந்தேகநபரின் வீட்டிற்கு சென்று தாக்குதல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இருப்பினும், குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணை
இது குறித்து தாக்கப்பட்ட நபரின் உறவினர்கள், வெளிநாட்டிலிருந்து வருகைதந்த நபர் ஒரு குழுவினை வைத்து தாக்குதல் நடத்திவிட்டு குறித்த நபர் கனடா நாட்டிற்கு தப்பித்து சென்றதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இது ஒரு கொலை முயற்சி எனவும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடாத்தி தீர்வினை பெற்றுத்தர வேண்டும் எனவும் பொலிஸாருடன் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவத்தில் தாக்கப்பட்ட வற்றாப்பளை பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய குறித்த இளைஞன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அத்தோடு, தாக்குதல் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் உள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
