ரணிலின் கோரிக்கையை நிராகரித்த சஜித் தரப்பு
தேசத்தைப் பாதுகாப்பதற்கு ஆதரவு வழங்கினால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டோரின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையை வழங்க முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கையை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மற்றும் கட்சியின் பிரசார முகாமையாளர் சுஜீவ சேனசிங்க ஆகியோர், இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்துள்ளது.
"தேசத்தைப் பாதுகாப்பதற்காக நாங்கள் அவருக்கு ஆதரவளித்தால் ஐக்கிய தேசியக் கட்சியில், எங்களின் உறுப்புரிமையை மீள இணைத்துக் கொள்ள ஜனாதிபதி முன்வந்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க
எவ்வாறாயினும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, பிரசன்ன ரணவீர மற்றும் ரோகித்த அபேகுணவர்தன ஆகியோருடன் நாங்கள் மேடையில் இருக்க விரும்பாததால் இந்த வாய்ப்பை ஏற்க நாங்கள் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில், ரணில் விக்ரமசிங்க இருப்பதாகத் தெரிகிறது,
ஏனெனில் அவர் முன்னர் கூறியது போல், ஐக்கிய மக்கள் சக்தியின் பதினைந்து முதல் இருபது வரையிலான, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற முடியாது.
ஜனாதிபதி தேர்தல்
இருப்பினும், அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அவர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக மரிக்கார் குறிப்பிட்டார்.

இதேவேளை, டி.எஸ்.சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, லலித் அத்துலத்ஜமுதலி மற்றும் காமினி திசாநாயக்க போன்ற ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களின் அபிவிருத்தி பாணியை மீண்டும் ஒருமுறை, ஐக்கிய மக்கள் சக்தி வெளிச்சத்துக்கு கொண்டுவரும் என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri