யாழில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு சஜித் வழங்கியுள்ள வாக்குறுதி
யாழ்ப்பாணத்தில் (Jaffna) போராட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) சந்தித்து கலந்துரையாடியதுடன் நாடாளுமன்றில் குறித்த விடயம் தொடர்பாக பேசுவதாகவும் வாக்குறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (10.06.2024) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்த சஜித் பிரேமதாச, போராட்டகாரர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
கல்வித்துறையில் சீர்திருத்தம்
இதன்போது, எமது ஆட்சி உருவாகும் நிலையில், கல்வித்துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவதாகவும், மாற்றுத் திறனாளி பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவேவேளை, அங்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமா சந்திரபிரகாஷ்
உள்ளி்ட்ட அமைப்பாளர்களும் உடனிருந்துள்ளனர்
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று மதியம் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனை சந்தித்து கலந்துரையாடி மனுவொன்றையும் கையளித்தனர்.
ஆசிரியர் நியமனத்தின்போது பரீட்சைகளை நடாத்தாது பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகள் மனுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் உயரதிகாரிகளுடன் கலந்துரையாடி முடிவொன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பட்டதாரிகளிடம் உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |