ரணிலை ஆதரிப்பதே சஜித்திற்கு ஒரே வழி: ஐ.தே.க. தெரிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோமாளிக் கூத்து ஆடும் சஜித்துக்கு ஆதரவளித்து பயனில்லை என்றும், ரணிலுக்கு ஆதரவளிப்பதே சிறந்தது என்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தருமான ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கடந்த தேர்தல் காலங்களின்போது எவ்வாறு பிரசார நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சஜித் பிரேமதாஸ எங்களிடம் கேட்டுள்ளார்.
ஏதேனும் பிரதேசம் ஒன்றுக்குச் செல்லும்போது அவர் உதவி கோருவார். நானும் அதற்கான அறிவுரைகளை வழங்கியுள்ளேன்.

இதற்கான வட்ஸ்அப் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் இல்லையென மறுக்க முடியாது. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றியுள்ளோம்.
இவ்வாறிருக்க அவரது அண்மைய யாழ்ப்பாணம் விஜயத்தின்போது அவருடைய கருத்துக்கள் உண்மையாகவே கவலையளிக்கின்றன. அவர் அவசர அவசரமாக ஜனாதிபதியாக நினைத்தால் கோட்டாபாய வெளியேறிய காலத்துக்கு முன்னதாகவே வெளியேற நேரிடும்.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோமாளிக் கூத்து ஆடும் சஜித்துக்கு ஆதரவளித்துப் பயனில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குவுக்கு ஆதரவளிப்பதே சிறந்தது." - என்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri