இலங்கைக்கு உதவுமாறு கட்டார் தூதுவரிடம் சஜித் கோரிக்கை
இலங்கையின் நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு உதவுமாறு கட்டார் தூதுவரிடம் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கைக்கான கட்டார் தூதுவர் ஜஸீன் பின் ஜாபர் ஜஸீம் அல் சரூர் இன்று (07) கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் எண்ணெய் நெருக்கடி தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கை வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை
இலங்கை வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கட்டாரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,இலங்கை - கட்டார் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது அவர் வலியுறுத்தியுள்ளார்.
இத்தருணத்தில் இலங்கைக்கு வழங்கப்பட முடியுமான சாத்தியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கட்டார் தூதுவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
கட்டார் அரசாங்கம் எதிர்க்கட்சித் தலைவருடன் வலுவான உறவைப்பேண விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடியைத் தீர்க்க எதிர்க்கட்சித் தலைவர் மேற்கொண்டு வரும் தலையீட்டிற்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த கட்டார் தூதுவர்,இதன் பொருட்டு முடியுமான பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
மதவாதம்,இனவாதம்,பிரிவினைவாதம் இல்லாத நாட்டை உருவாக்குவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் கட்டார் தூதுவரிடம் தெரிவித்ததோடு,எதிர்காலத்தில் கட்டாரில் இலங்கைக்கு குறைந்தது ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளை தயார் செய்வதாகவும் கட்டார் தூதுவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam