இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்களின் வித்தியாசமான செயல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவான காட்சி(Video)
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலை உலக நாடுகளுக்கு மத்தியில் இலங்கையை பேசுபொருளாக மாற்றியுள்ளது.
இலங்கையை தவிர்க்கும் நாடுகள்

இலங்கைக்கு அன்னியசெலாவணியை ஈட்டித் தரும் பிரதான துறையான சுற்றுலாத்துறை கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
மேலும், இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு, பிரித்தானியா - நியூஸிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளன.
சைக்கிளை கொண்டு வந்த பயணிகள்
இந்த நிலையில், இலங்கைக்கு வந்த சில சுற்றுலாப் பயணிகள் தம்மோடு சேர்த்து சைக்கிள் ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.
இன்றைய தினம் இது தொடர்பான காட்சிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவாகியுள்ளது.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி நிலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து பலரும் சைக்கிள் கொள்வனவு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதன் காரணமாக சைக்கிள்களின் விலை பாரியளவில் அதிகரித்து காணப்படுகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் வெளிநாட்டில் இருந்த வருகைத்தந்த சிலர் தம்முடன் சைக்கிளையும் சேர்ந்து கொண்டு வந்துள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam