வாக்குறுதிகளை இப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள் - நாடாளுமன்றத்தில் அரசிடம் சஜித் வலியுறுத்து

Sajith Premadasa National People's Power - NPP NPP Government
By Rakesh Sep 10, 2026 04:34 PM GMT
Report

கடந்த தேர்தல் காலத்தில் தற்போதைய அரசைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்டத்தில் இருந்தபோது வழங்கிய வாக்குறுதிகளை இன்று ஆட்சியமைத்தவுடன் மறந்துவிட்டனர் என்று குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அந்த விவகாரங்களை இப்போதாவது உடனே நிறைவேற்றுமாறும் நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், "2020.01.01 முதல் 2025.03.31 வரை ஓய்வுபெறத் தகுதி பெற்ற ஒரு இலட்சத்து 54 ஆயிரம் பேருக்கு 03 - 2016 இலக்க சுற்றறிக்கையின்படியே சம்பளம் தயாரிக்கப்பட்டுள்ளதால் கடும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

எனவே, இவர்களது ஓய்வூதியப் பணிக்கொடுப்பனவு முரண்பாடுகளைத் தீர்த்து, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு கோருகின்றேன். இல்லாவிட்டால் அது மனித மற்றும் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

'த பைனான்ஸ்' நிறுவனம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 6 ஆயிரத்து 300 வைப்பாளர்கள் கடும் அசௌகரியத்துக்குள்ளாகியுள்ளனர். மத்திய வங்கியின் நிர்வாகத்தின் கீழ் இருந்தபோது இந்த நிறுவனத்தில் பாரிய நட்டம் ஏற்படுத்தப்பட்ட போதிலும், வைப்பாளர்கள் அனைவருக்கும் முழுத் தொகையையும் வழங்க அரசு வெளிப்படைத்தன்மையுடன் சொத்துக்களை ஏலமிட வேண்டும்.

 இரண்டாம் கட்டப்பணிகள்

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 2025 ஜனவரி 3ஆம் திகதிக்குள் நிறைவடைய வேண்டியிருந்த போதிலும், இன்னும் முடிக்கப்படவில்லை.

வாக்குறுதிகளை இப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள் - நாடாளுமன்றத்தில் அரசிடம் சஜித் வலியுறுத்து | Sajith Request Government In Parliament

திட்டப் பணிப்பாளர் கூட இல்லாமல், அமைச்சரவை அல்லது துறைமுக அதிகார சபையின் அங்கீகாரமின்றி சட்டவிரோதமாக இடம்பெறும் இந்தப் பணிகள் குறித்து உள்ளக கணக்காய்வு மற்றும் நாடாளுமன்ற விசாரணையை நடத்த வேண்டும்.

தங்களை அதிகாரத்துக்குக் கொண்டுவருவதற்காகப் பாடுபட்ட ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இன்னும் முறையான சேவைப்பிரமாணக் குறிப்புகள் வழங்கப்படவில்லை.

திறைசேரியில் பணம் நிரம்பியுள்ள நிலையில், 'அத்தம' திட்டம் மூலம் மக்களிடம் பணம் சேகரிப்பதை விட்டுவிட்டு இவர்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குங்கள்.

இஸ்ரேல் நாட்டின் உட்கட்டமைப்புத் துறை வேலைவாய்ப்புகளுக்காகப் பதிவு செய்த 1,200 பேருக்கு இன்னும் வாய்ப்பு வழங்கப்படாமல் லொட்டரி முறை இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.

வடக்கு- கிழக்கு மற்றும் மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசேட கலந்துரையாடல்

வடக்கு- கிழக்கு மற்றும் மலையக எம்.பிக்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் விசேட கலந்துரையாடல்

22ஆவது திருத்தம் 

இதனால் 560 பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ள நிலையில், அரசு ஊடாகச் செல்ல வேண்டிய வாய்ப்பு தாமதப்படுத்தப்படுவதால் அப்பாவி இளைஞர்கள் தனியாரிடம் சென்று 35 இலட்சம் வரை செலவழித்துப் பாதிக்கப்படுகின்றனர். நாட்டில் தனிக் கட்சி அரசை ஸ்தாபிக்கும் நடவடிக்கையாகவே 22ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகின்றது.

வாக்குறுதிகளை இப்போதாவது உடனடியாக நிறைவேற்றுங்கள் - நாடாளுமன்றத்தில் அரசிடம் சஜித் வலியுறுத்து | Sajith Request Government In Parliament

இது நீதியின் சுதந்திரத்துக்கு விடப்படும் மரண அடியாகும். இதன் மூலம் மக்களின் வறுமையோ வேலையின்மையோ தீர்க்கப்படப் போவதில்லை என்பதால் இதனை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

நெல் ஒரு கிலோவுக்கு 150 ரூபா உத்தரவாத விலை வழங்கப்படும் எனத் வாக்குறுதியளித்துவிட்டு, இன்று 120 ரூபாவே வழங்கப்படுவதால் விவசாயிகள் கிலோ ஒன்றுக்கு 17 ரூபா நட்டத்தைச் சந்தித்து நிர்க்கதியாகியுள்ளனர்.

விவசாயிகளுக்குக் கொத்தமல்லி சூத்திரத்தின் கதியே ஏற்பட்டுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் ஒரு நபருக்கு 30 நாள்களுக்கு வாழ்வதற்கு 18 ஆயிரத்து 200 ரூபா போதுமானது என்று கூறப்படுகின்றது. இந்தத் தொகையைக் கொண்டு யதார்த்தத்தில் ஒருவரால் வாழ முடியுமா என அரசிடம் கேள்வி எழுப்புகின்றேன்." என்றார்.

100 டொலரை கடந்து செல்லும் மசகு எண்ணெய் விலை! உலக சந்தை ஸ்தம்பிதம்

100 டொலரை கடந்து செல்லும் மசகு எண்ணெய் விலை! உலக சந்தை ஸ்தம்பிதம்

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி

01 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், நீர்வேலி

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அத்தாய், London, United Kingdom

29 Nov, 2025
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, வவுனியா

16 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada, யாழ்ப்பாணம்

28 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, London, United Kingdom

08 Nov, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

16 Nov, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, டுசில்டோஃப், Germany

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிக்குளம், பிரான்ஸ், France

29 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வெலிமடை, கொக்குவில், அரியாலை, Mississauga, Canada

14 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US