சபையில் மௌனிக்கப்பட்ட மின்கட்டண விவகாரம்.. எதிர்க்கட்சி தலைவர் ஆதங்கம்
33 வீத மின்கட்டண குறைப்பு வழங்கப்படும் என அரசாங்கத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும் 18.3 வீத கட்டண அதிகரிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று (22.05.2025) தனது எக்ஸ் தள பக்கத்தில் இட்டுள்ள பதிவில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்டண உயர்வு
குறித்த பதிவில், "இன்று நாடாளுமன்றத்தில் மௌனிக்கப்பட்டு விட்டது, எனவே நான் இங்கே கேட்கிறேன்.
33 வீத மின்கட்டண குறைப்பு வழங்கப்படும் என அரசாங்கத்தால் வாக்குறுதி அளிக்கப்பட்ட பின்னர், மின் கட்டணங்கள் 18.3 வீதமாக உயர்த்தப்படும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.
Silenced in Parliament today, so I’ll ask here: power bills proposed hike at 18.3% after a promised 33% cut now water tariff hikes are rumoured next. When will they land, and how hard will they hit already strained households?
— Sajith Premadasa (@sajithpremadasa) May 22, 2025
அதேவேளை, இப்போது தண்ணீர் கட்டண உயர்வுகள் ஏற்படும் எனவும் வதந்திகளாக உள்ளன. அவை எப்போது நடைமுறைக்கு வரும், ஏற்கனவே சிரமத்தில் உள்ள மக்களை அவை எவ்வளவு கடுமையாகப் பாதிக்கும்?” என வினவியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
