இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலை! மக்களை ஏளனம் செய்யும் அமைச்சர்கள் - சஜித் குற்றச்சாட்டு
அரசாங்கம் மும்முனைகளில் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அரசாங்க அடக்குமுறை விஸ்தரிப்பு
அதி உயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனம் செய்துள்ளதன் மூலம் அரசாங்க அடக்குமுறை மேலும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இளம் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
அரசாங்கத்தால் இடையூறு
சுதந்திர ஊடக செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடையூறு விளைவித்து வருகிறது.

நாடு மந்த போசனைக்கு உட்பட்டுள்ளதுடன், பிள்ளைகள் பகல் உணவிற்காக தேங்காய் சாப்பிடும் நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் மக்களை ஏளனம் செய்கின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan