ஜனநாயக முறைமையையே சீர்குலைக்கும் செயற்பாடு! அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்க எச்சரிக்கை

Sajith Premadasa Government Of Sri Lanka President of Sri lanka
By Rakesh Jul 28, 2026 02:08 PM GMT
Report

முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று கூறிய திசைகாட்டி அரசாங்கம், தற்சமயம் ஜனநாயக முறைமையையே சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று (28.07.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், வெற்றிடமாகியிருக்கும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் தவறியுள்ளனர். தற்சமயம் நாட்டில் இருக்கும் கனம் நீதிபதிகள் இந்தப் பதவிகளுக்குப் பொருத்தமற்றவர்களா அல்லது தகுதியற்றவர்களா என நாம் கேள்வி எழுப்புகின்றோம்.

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி: எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தீவிர நகர்வு

நீதியரசர்களின் ஓய்வு வயதை நீடிக்க அமைச்சரவை அனுமதி: எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தீவிர நகர்வு

வயதெல்லையை மாற்றுவதற்கான அரசமைப்புத் திருத்தம்

இந்த வெற்றிடங்களை நிரப்பாமல் இருக்கும் அதேவேளையில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவதற்கான அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர அரசு தீர்மானித்து, அது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்துக்கும் அனுமதியைப் பெற்றுள்ளது.

ஜனநாயக முறைமையையே சீர்குலைக்கும் செயற்பாடு! அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்க எச்சரிக்கை | Sajith Premadhasa Statement

இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஏன் செல்கின்றது? ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காகவே அரசுக்கு மக்கள் ஆசி கிடைத்த போதிலும், அதற்குப் பதிலாக அரசு ஏகாதிபத்திய சர்வாதிகாரத்தையும் தனிக்கட்சி நாட்டை ஆளும் கொள்கையையும் பின்பற்றி வருகின்றது. இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் முதலமைச்சர் வேட்பாளர் பதவியைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து, இலஞ்சம் வழங்கி, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை மாற்றுவதற்கு அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொண்டதாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்தி வருகின்றார்.

ஜே.வி.பியைப் பிரதிநிதித்துவம் செய்யும் அதன் தலைமைச் சபை அங்கத்தவரான சட்டத்தரணி லால் விஜேநாயக்க மற்றும் சாலிய பீரிஸ் போன்ற அனுபவமிக்க ஜனாதிபதி சட்டத்தரணிகள் கூட அரசின் இந்த யோசனையை எதிர்க்கின்றனர். இதனையும் நாங்களா செய்தோம்? ஐக்கிய மக்கள் சக்தியின் யோசனையின் காரணமாகவா இவர்களும் இவ்வாறு பிரஸ்தாபித்துள்ளனர்?

13 நாட்களுக்கு தொடர் தாக்குதல் - ட்ரம்ப் அறிவிப்பால் சரிந்த கச்சா எண்ணெய் விலை

13 நாட்களுக்கு தொடர் தாக்குதல் - ட்ரம்ப் அறிவிப்பால் சரிந்த கச்சா எண்ணெய் விலை

நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம்

இனியாவது இவ்வாறான பொய்களாலும் ஏமாற்றங்களாலும் நாட்டு மக்களை ஏமாற்ற வேண்டாம். அரசு பொய்களையே கூறி வருகின்றது என்பது வெளிப்படையாகிவிட்ட நிலையில், இப்போதாவது ஜனநாயகத்தை அழிக்க வேண்டாம் என நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

ஜனநாயக முறைமையையே சீர்குலைக்கும் செயற்பாடு! அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்க எச்சரிக்கை | Sajith Premadhasa Statement

அரசு ஜனநாயகத்தை அழிக்க முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் அவற்றை ஜனநாயக முறையிலேயே தோற்கடிப்பதுடன், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான சகல பணிகளையும் முன்னெடுப்போம்.

ஏகாதிபத்திய சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்ட மேற்கொள்ளும் முயற்சியைக் கைவிட்டு, "அழகான நாடு - வளமான வாழ்க்கை" எனும் கொள்கை அறிக்கையை உடனடியாக நடைமுறைப்படுத்தும்படி அரசைக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

400 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு..! அடுத்த சில வருடங்களில் நாடு திவாலாகிவிடும் என பகிரங்க எச்சரிக்கை

400 ரூபாவை தாண்டும் டொலரின் மதிப்பு..! அடுத்த சில வருடங்களில் நாடு திவாலாகிவிடும் என பகிரங்க எச்சரிக்கை

8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US