சர்வகட்சி அரசாங்கத்துடன் ஒருபோதும் இணையமாட்டோம்: சஜித் ஆதங்கம்
எதிர்க்கட்சியை அரசாங்கம் குறை கூறினாலும், சர்வகட்சி அரசாங்கத்துடன் ஒருபோதும் இணையமாட்டோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பஹுவ தொகுதிக் கூட்டத்தில் இன்று(28) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை
அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வகட்சி அரசாங்கம் என்பது புதிய புரளியாகும். சர்வகட்சி அரசாங்கம் என்று கூறும் அரசு ஏன் ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்கின்றது.
தற்போதைய தேவைக்காக பதவிகளைப் பகிர்ந்தளிக்கவும் மாட்டோம். ஒரு போதும் திருடர்களுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை ஏற்கவும் மாட்டோம்.
ஆனால், அரசாங்கம் நாட்டுக்கு நல்ல விடயங்களைச் செய்யும் போது அதற்கு ஆதரவளிப்போம்.
தேங்காய் எண்ணெய், சீனி, பூண்டு போன்ற பொருட்களின் மோசடிகள் மற்றும் கழிவுப்பொருள்
கப்பலுக்குப் பணம் கொடுத்த மோசடிகள் இவை அனைத்தும் உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri
