பிரதமராக சஜித் பதவியேற்கலாம்! ஊடகம் ஒன்றின் பரபரப்புத் தகவல்(photo)
பிரதமராகப் பொறுப்பேற்று அரசாங்கத்தை அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பின் முக்கிய பகுதியில் வீதியை மறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் (Video) |
அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமயத் தலைவர்கள், மல்வத்தை, அஸ்கிரிய பீடாதிபதிகள் உள்ளிட்ட சிவில் அமைப்புகள் இணைந்து நாட்டை மீட்பதற்காக சர்வ கட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு விடுத்த கோரிக்கையை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திங்கட்கிழமை நடக்கப் போவது என்ன...! தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் |
எனினும், மக்களால் தெரிவு செய்யப்பட்டால் அன்றி, பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என சஜித் பிரேமதாச தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.