சஜித் பிரேமதாஸவால் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பேருந்து கையளிப்பு (photo)
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் கீழ் 45 ஆவது கட்டமாக 50 இலட்சம் ரூபா பெறுமதியான பாடசாலை பேருந்து ஒன்று கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு நேற்று (21.12.2022) அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மாணவர்களுடைய கல்விச் செயற்பாடுகளுக்கு வலுவூட்டும் வகையில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ள நிகழ்வில் பேருத்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
பேருந்து கையளிப்பு
இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் டாக்டர் விஜயராஜன் உள்ளடங்கலான கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
