தமிழரசு கட்சியினரை சந்தித்து கலந்துரையாடிய சஜித் பிரேமதாச

M A Sumanthiran Sajith Premadasa Sri Lanka Northern Province of Sri Lanka
By Theepan Jun 11, 2024 11:23 AM GMT
Report

வடக்கிற்கு விஜயம் செய்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இலங்கைத் தமிழரசுக் கட்சியினரை (ITAK) சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாணத்திற்கு (Jaffna) விஐயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் எங்களுடைய தமிழரசுக் கட்சியினருடன் பேச வேண்டுமென்று கோரியதன் அடிப்படையில் இன்று (11.06.2024) சுமார் இரண்டு மணித்தியாலங்கள் எங்களுடைய இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. 

சஜித்துடன் இணைய அரசியல்வாதிகள் முயற்சி: வெளியாகியுள்ள தகவல்

சஜித்துடன் இணைய அரசியல்வாதிகள் முயற்சி: வெளியாகியுள்ள தகவல்

கொடுத்ததை மீளப்பெறும் சூழ்ச்சி

இதில் எங்களுடைய கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, சிரேஸ்ர உபதலைவர் சீ்.வீ.கே.சிவஞானம், நிர்வாகச் செயலாளர் குலநாயகம் மற்றும் நானும் கலந்து கொண்டு தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு சம்பந்தமாக எடுத்துக் கூறியுள்ளோம்.

அதிகாரப் பகிர்வு தொடர்பான 13 ஆம் திருத்தத்தைக் கூட இப்பொழுது இன்னமும் மோசமான நிலைக்கு கடந்த கால அரசாங்கங்கள் கொண்டு வந்து விட்டிருக்கின்றன.

sajith-premadasa-tamil-arasu-katchi-members

கொடுத்ததையும் மீளப்பெறும் ஒரு சூழ்ச்சியின் காரணமாக இப்பொழுது அது மிகவும் நலிவடைந்ததாக காணப்படுகிறது. ஆகவே 13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது கூட இன்று அர்த்தம் இல்லாமல் இருக்கிறது என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம்.

இவற்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக்கும் போது, முதலில் கிராமம் கட்டியெழுப்பபட வேண்டும் என்றும் அதன் பிறகு நகரம் பிரதேச செயலகம், மாவட்டம், மாகாணம் கட்டியெழுப்பப்பட்டு அதற்கு பிறகு தான் நாடு கட்டியெழுப்பபடும் என்றும் தெரிவித்தார்.

நாட்டின் வெவ்வேறு இனங்கள் மத்தியில் உள்ள பரஸ்பர நம்பிக்கையீனத்தை சிறிது சிறிதாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதோடு அனைவரும் சேர்ந்து செயற்பட வேண்டும் என்ற கருத்தையும் அவர் கூறியிருந்தார்.

சஜித்தின் தேர்தல் அறிக்கை

இந்த நாடு நோக்கி அவர் சொல்லுகிற கருத்தியல்களை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எங்களது தமிழ் மக்களின் அடையாளங்கள் பேணப்பட வேண்டும். தமிழ் மக்களது தாயகத்திலே வடக்கு, கிழக்கு இணைந்ததான ஒரு அலகிலே பூரண அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

இதை நாம் அவரிடம் தெளிவுப்படுத்தியிருந்தோம். இதுவே, எங்கள் மக்களுடைய எதிர்பார்ப்பு எனவும் கூறியிருந்தோம்.

sajith-premadasa-tamil-arasu-katchi-members

ஆகவே, அதிகாரப் பகிர்வு சம்பந்தமான அவருடைய நிலைப்பாட்டை எங்களுடைய மக்களுக்கு மட்டுமல்லாமல் பெரும்பான்மை மக்களுக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்

இதற்கு சஜித் தரப்பிலிருந்து தன்னுடைய தேர்தல் அறிக்கையில் அவை அனைத்தும் உள்ளடக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது” என குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

13ஆவது சட்ட திருத்தம் குறித்து சஜித்திற்கு ஆதரவளிக்கும் முன்னாள் சபாநாயகர்

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு: இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம்

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு: இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US