சஜித்துடன் இணைய அரசியல்வாதிகள் முயற்சி: வெளியாகியுள்ள தகவல்
ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, டலஸ் அழகப்பெரும (Dullas Alahapperuma), தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara) மற்றும் ரொஷன் ரணசிங்க (Roshan Ranasinghe) தலைமையிலான அரசியல் குழுக்களே குறித்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தேர்தல் உருவாக்கத்திற்கான வழிமுறைகள் இன்னும் உருவாக்கப்படாத நிலையில் நாடாளுமன்ற தேர்தல் ஒன்று எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய அரசியல் அமைப்புக்கள்
இதற்கிடையில், புதிய அரசியல் அமைப்புக்கள் யதார்த்தமானவை என அரசியல் தரப்புக்கள் கூறுகின்றன.

மேலும், இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பின்னர், அதிலிருந்து விலகி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri