இந்திய அமைச்சரவையில் மீண்டும் நிர்மலா : முக்கிய பொறுப்பில் ஜெய்சங்கர்
இந்தியாவில் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புக்களில் இருந்து தவிர்க்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த நிர்மலா சீத்தாராமன் மீண்டும் நிதியமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
அத்துடன் அவருக்கு நிறுவனங்களை கண்காணிக்கும் பொறுப்பும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமனின் ஜிஎஸ்டி கொள்கைகளே பாரதிய ஜனதாக்கட்சியின் பின்னடைவுக்கான முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் அவர் மக்கள் மீது மிக அதிகமாக வரி விதித்தார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
எனினும் குற்றச்சாட்டுக்களை எல்லாம் மீறி அவர் தேர்தலை சந்திக்காமலேயே அவர்; அமைச்சராகி இருக்கிறார்.
இந்தநிலையில் புதிய அமைச்சரவையில்; ராஜ் நாத் சிங் பாதுகாப்பு அமைச்சராகவும், அமித் சா உள்துறை அமைச்சராகவும், சுப்பிரமணியன் ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்சராகவும் மீண்டும் பொறுப்பேற்றுள்ளனர்.
41பேர் இணை அமைச்சர்கள்
நிதின் ஜெய்ராம் கட்கரி சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த அமைச்சர்கள் உட்பட்ட 31 அமைச்சர்களின் பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம் தமிழ் நாட்டில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த எல் முருகன் தகவல் தொடர்பு மற்றும் நாடாளுமன்ற விவகார இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் உட்பட்ட 41பேர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |