மின்சார கட்டணத்திற்கு உடனடி தீர்வு அவசியம்: சஜித் கோரிக்கை
நீர்த்தேக்கங்கள் அனைத்திலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் மின்சார கட்டணத்திற்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (22.05.2024) அமர்வின் போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மின்சார கட்டணம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ கடந்த 20 ஆம் திகதிக்குள் நீர்மின் உற்பத்தி 31 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக மின் உற்பத்தி அதிகரிப்பின் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும்.
இந்நிலையில், மின்சார அலகு ஒன்றின் விலையை குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில நாட்களுக்கு முன்னர், அசர்பைஜான் எல்லையில் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi), ஈரான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட எட்டு அரச அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (22) நாடாளுமன்றத்தில் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த திடீர் விபத்து மற்றும் மரணங்கள் குறித்து கேள்விப்பட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாகவும், அவரது மறைவு இலங்கைக்கும் எமது பிராந்தியத்திற்கும் பாரிய இழப்பாகும் என்றும், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |