சர்வதேச நாணய நிதியத்திடம் சஜித் விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை ஏற்றுமதிக்கான எளிமையாக்கப்பட்ட பெறுமதி சேர் வரியை (SVAT) ஐரோப்பிய நாடுகளுக்குக் குறைக்கப்படக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்தை (IMF) கோரியுள்ளார்.
கொழும்பில் வைத்து சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவின் தலைவர் எவன் பாப்பஜோர்ஜியூ (Evan Papageorgiou) மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்த்தா வோல்டெமைகல் (Martha Worldemichael) ஆகியோரை நேற்று(2) சந்தித்த போதே இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
கோரிக்கை
இந்த வரியைக் குறைத்தால் இலங்கை ஏற்றுமதியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதை அவர் அதிகாரிகளுக்கு அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, ஏற்றுமதியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தனது கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளுமாறு சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளிடம் சஜித் பிரேமதாச கேட்டுக்கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



