வீடமைப்பு அதிகார சபையினரால் வழங்கப்பட்ட வீடுகள் கையளிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட ரூபா ஒரு மில்லியன் பெறுமதியான நான்கு வீடுகள் கையளிப்பு நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு இன்றையதினம்(2) நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், பிரதேச அமைப்பாளர் சாம் ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு வீடுகளை நாடவெட்டி சம்பிர்தாயபூர்மாக திறந்துவைத்து பயனாளிகளிடம் கையளித்தனர்.
வீடுகள் கையளிப்பு
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த அமைப்பாளர் சாம் அம்பன் கிழக்கின் பல வீதிகள் இன்னும் போடப்படாமலும் சீர் செய்யப்படாமலும் இருப்பதால் அவை தொடர்பில் கவனமெடுத்து அவற்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவகர் தோமஸ் யூட், கிராம சேவகர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
சென்னை தம்பதியரின் குளியலறைக்குள் எட்டிப்பார்த்த ஹொட்டல் ஊழியர்: நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி News Lankasri
ரஷ்யாவுடன் இறுகும் போர்... பிரித்தானிய இராணுவத்திற்கு 28 பில்லியன் பவுண்டுகள் நிதி பற்றாக்குறை News Lankasri