மனம் மாறிய சஜித்! தனது கோரிக்கையை நிறைவேற்றிய அரசுக்கு நன்றி தெரிவிப்பு
என்பிபி அரசாங்கத்திற்கு தான் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்றியமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டெங்கு கட்டுப்பாட்டாளர் 840 பேரை நிரந்தர சேவையில் இணைத்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
முன்வைத்த கோரிக்கை
இலவச சுகாதாரத் துறையில் மக்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதில் டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள் சிறப்புப் பங்காற்றி வருகின்றனர்.
டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்களின் பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார்.
8 ஆவது தரம் மற்றும் NVQ நிலை 3 சித்தியடைந்த 840 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்தாலும், மேலும் 298 பேர் நிரந்தர நியமனம் இல்லாமல் உதவியற்ற நிலையில் உள்ளனர்.

இவர்களுக்கு 27,000 ரூபாய் கொடுப்பனவுடன் களத்தில் இறங்கி வேலை செய்வது கடினமாக உள்ளது. இவர்களையும் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam