அடிப்படை உரிமைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் முன்வைத்துள்ள கோரிக்கை
நமது நாட்டின் அரசமைப்பில் அடிப்படை உரிமைகளின் கீழ் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதார, சமூக, சுகாதார மற்றும் கல்வி உரிமைகள் சேர்க்கப்பட வேண்டும்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
இவை அடிப்படை மனித உரிமைகளாக மாற்றப்படும் போதே, மாதவிடாய் வறுமையைப் போலவே நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வுகளைக் காண முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் மாதவிடாய் சுகாதார நலன் மற்றும் அது சார்ந்த சவால்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நேற்று(28.05.2026) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், மருத்துவ நிபுணர்கள், பெண்கள் அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை உள்ளடக்கிய விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முற்போக்கான சிந்தனை
அங்கு எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறுகையில்,
"நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 52 சதவீதமானோர் பெண்களாகவே காணப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு சூழலில், மாதவிடாய் வறுமை என்பது நம் சமூகத்தில் பல்வேறு கோணங்களைக் கொண்ட ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது குறித்துப் பொதுவெளியில் பேசத் தயங்குவதும், கலாசார ரீதியாக இது பொருத்தமற்றது என்று கருதுவதும் தவறானதாகும்.

இந்தத் தேக்க நிலையிலிருந்து விடுபட்டு நாம் அனைவரும் முற்போக்கான சிந்தனையுடன் செயல்பட வேண்டும். மருத்துவத் துறையின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, நாட்டில் மாதவிடாய் சுகாதாரத்தைச் சரியாக முகாமைத்துவம் செய்யாமையினால் பெண்கள் பல்வேறு தீவிர சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
மாதவிடாய் சுழற்சிக்கு உட்படும் 42 இலட்சம் பெண்களில் 70 சதவீதமானோர், அதாவது சுமார் 30 இலட்சம் பேர் முறையான சுகாதாரப் பொருட்களைப் பயன்படுத்துவதில்லை என்பதுடன், ஆபத்தான முறையற்ற வழிகளையே பின்பற்றுகின்றனர்.
இதனால் ஏற்படும் தீவிரப் பாதிப்புகளுக்கு உள்ளாகுபவர்களில் வெறும் 12.6 சதவீதமானோர் மாத்திரமே முறையான மருத்துவ உதவிகளைப் பெறுகின்றனர். இந்நிலையானது மாணவிகளின் பாடசாலை வரவைக் கணிசமாகக் குறைத்துள்ளது.
சக மாணவர்களால் கேலி செய்யப்படுவது, பாடசாலை சீருடைகளில் ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் மன உளைச்சல் காரணமாக நாட்டில் 50 முதல் 60 சதவீதமான மாணவிகள் மாதவிடாய் நாள்களில் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்க்கின்றனர்” என தெரிவித்தார்.






அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan