ஆரோக்கியமற்ற விடயங்களை பேசும் சஜித் பிரேமதாச!
எப்போதோ நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு தான் பொது வேட்பாளர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறுவது ஆரோக்கியமானதல்ல என பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
12 கட்சிகளை சேர்ந்த எதிரணியினரின் முதலாவது கூட்டத் தொடர் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸின் இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது, கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் பங்கேற்கவில்லை.
பொது வேட்பாளர்
இரண்டாம் கட்ட சந்திப்பில் சிறுபான்மை கட்சி தலைவர்களில் ரிசாட் பதியுதீன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர்கலந்து கொண்ட போதிலும் ரவூப் ஹக்கீம் கலந்து கொள்ளவில்லை.
பீரிஸின் வீட்டில் இடம்பெற்ற கலந்துரையாடல் பெரும் முரண்பாட்டை ஏற்படுத்தியிருப்பது சம்பிக்க ரணவக்க மற்றும் மனோ கணேசனின் கருத்துக்கள் மூலமாக தெரியவருகின்றது.
அதே நேரத்தில், தான் தான் பொது வேட்பாளர் என்றும் ஜனாதிபதித் தேர்தலில் பங்கு கொள்வேன் என்றும் சஜித் பிரேமதாச கூறியிருக்கின்றார்.
மேற்கூறிய எந்தவொரு விடயமும் நாட்டிற்கு ஆரோக்கியமான விடயமாக தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா





4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
