அரசின் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அழிப்புக் கொள்கை குறித்து IMF பிரதிநிதியிடம் சஜித் சுட்டிக்காட்டு
தற்போதைய அரசு புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை இல்லாதொழிக்கும் வகையில் முன்னெடுத்து வரும் கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டாக்டர் மார்த்தா டெஸ்பாயே வோல்டெமைக்கேலை நேற்று (03.10.2026) சந்தித்துத் தெளிவுப்படுத்தியுள்ளார்.
நிலைபேறான வலுச்சக்தி மற்றும் சூரிய சக்தியை அழித்தொழிக்கும் பல கொள்கைகளைத் தற்போதைய அரசு நடைமுறைப்படுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
குறைந்த விலையில் மின்சாரம்
சூரிய சக்தியின் ஊடாக நுகர்வோருக்குக் குறைந்த விலையில் மின்சாரத்தைப் பெற்றுக் கொடுப்பதும், இளைஞர்களைத் தொழில்முனைவோராக உருவாக்குவதும் இதனால் பாதிக்கப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கூரையின் மீதான சூரிய சக்தி அமைப்புகள் ஊடாக தேசிய மின் வலையமைப்புக்கு 2 ஆயிரத்து 500 மெகாவாட் இணைக்கப்படுவதன் மூலம் மாதமொன்றுக்கு 25 பில்லியன் ரூபா நாட்டுக்குச் சேமிக்கப்படுகின்றது.
இவ்வாறான சாதகமான சூழல் காணப்பட்ட போதிலும், டீசல் மாபியா கும்பல் அதனைப் பிரபல்யப்படுத்தத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்றும் அவர் கூறினார்.
டீசல் மாபியாவின் நிகழ்ச்சி நிரல்

எல்.என்.ஜி. மற்றும் டீசல் கலப்புடன் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, எரிபொருள் மற்றும் டீசல் மாபியாவின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
220 இலட்சம் மக்கள் சார்பாக இதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும், 70 சதவீத புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியுடன் மட்டுப்படுத்தாமல், 100 சதவீத புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி இலக்கை நோக்கிச் செல்ல அரசுக்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் தெரிவித்த அவர், இதற்காக உச்சபட்ச ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan