கருங்கண்டல் பாடசாலைக்கான திறன் வகுப்பறை சஜித் பிரேமதாசவினால் திறந்துவைப்பு
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) பிரபஞ்சம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக மன்னார் (Mannar) மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கருங்கண்டல் பாடசாலைக்கான திறன் வகுப்பறை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது, இன்றைய தினம் (15.07.2024) நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட கருங்கண்டல் பாடசாலையில் அமைக்கப்பட்ட குறித்த திறன் வகுப்பறை (SMART CLASS ROOM) மாணவர்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
நிதி வழங்கல்
மேலும், கருங்கண்டல் பாடசாலை அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பிரதிநிதி வசந்த், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அதேளை, குறித்த பாடசாலைகளின் நூலகங்களுக்கு தேவையான ஒரு தொகுதி ஆங்கில புத்தகங்கள் வழங்கப்பட்டதோடு, புதிய நூல்களை கொள்வனவு செய்ய தலா ஒரு இலட்சம் ரூபா நிதியும் சஜித் பிரேமதாசவினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - ராயூகரன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam