சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பது குறித்து அதிகாலை வரை கலந்துரையாடிய சஜித்
தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்பதா, இல்லையா என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அதிகாலை 1 மணி வரையில் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூம் தொழிநுட்பத்தின் ஊடாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் இவ்வாறு அவர் கலந்துரையாடியுள்ளார் என தெரியவருகிறது.
சுதந்திர தின நிகழ்வுகளுக்காக அரசாங்கம் பாரியளவு தொகையை விரயம் செய்வதாகவும் இதனால் இந்த நிகழ்வில் பங்கேற்க கூடாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க கூடாது என கட்சியின் உறுப்பினர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.
இதன் காரணமாகவே எதிர்க்கட்சித் தலைவர் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
சுதந்திர தின நிகழ்வுகளை புறக்கணித்த சஜித்!