சஜித் பிரேமதாசவிடம் இருந்து விலகிச்செல்லும் தொகுதி அமைப்பாளர்கள்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பல தொகுதி அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளில் விலகும் முடிவை அறிவித்து வருகின்றனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து, குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளை அடுத்தே, இந்த பதவி விலகல் அறிவிப்புக்கள் வெளியாகி வருகின்றன.
பதவி விலகல்
அதன்படி, இதுவரை, பண்டாரவளை தொகுதி அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமிந்த விஜேசிறி, ஹொரொவ்பொத்தானை தொகுதி அமைப்பாளருமான அனுர புத்திக, தம்புள்ளை தொகுதி அமைப்பாளருமான சம்பக விஜேரத்ன, ரத்தொட்டை தொகுதி அமைப்பாளரும், பிரதி தேசிய அமைப்பாளருமான ரஞ்சித் அலுவிஹார, நுவரெலிய மாவட்ட இணை அமைப்பாளர் அனகிபுர அசோக சேபால, காலி தொகுதி அமைப்பாளர் பந்துலால் பண்டாரகொட ஆகியோர், தங்கள் அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
அவர்கள் தங்கள் பதவி விலகல் கடிதங்களை கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
