தனி நேர்காணல் நிகழ்வாக மாறிய அனுர - சஜித் விவாதம்
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anurakumara Dissanayaka) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் (Sajith {Premadasa) இடையில் நடைபெறவிருந்த பொது விவாதம் தனி நேர்காணல் நிகழ்வாக மாறியுள்ளது.
குறித்த விவாதமானது, நேற்றிரவு (06.06.2024) நடைபெறவிருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வருகை தராமையினால் தனி நேர்காணலாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சி
இந்நிலையில், விவாதத்துக்கு சஜித் பிரேமதாச தயாராக இருந்தபோதும், தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் விவாதத்துக்கு அவர் இணக்கம் வெளியிடவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், தொலைக்காட்சி நிகழ்ச்சியாக பொது இடம் ஒன்றில் நடத்தப்படும் விவாதத்துக்கே சஜித் இணக்கம் வெளியிட்டதாகவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசியல் விவாதமானது நிறுத்தப்பட்டதுடன் அனுரகுமார திசாநாயக்கவிற்கு மாத்திரம் தனி நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |