அமெரிக்க வரி விதிப்பு: அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர்
நாட்டின் ஏற்றுமதிகள் மீது அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் தொடர்பில், எதிர்க்கட்சியின் ஆலோசனையை அரசாங்கம் கவனிக்காமை காரணமாக, இலங்கை குடிமக்கள் விலை கொடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய செயல்திறன் தொடர்பிலேயே சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரேமதாச, வியட்நாமும் கம்போடியாவும் வரிகளைக் குறைப்பது குறித்து சிறிது காலத்திற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார சேதம்
எனினும், இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் செயலற்ற தன்மையை அவர் விமர்சித்தார்.
இன்று கொழும்பு பங்குச் சந்தை சரிந்து, வர்த்தகம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்ட அவர், இலங்கை ஏற்றுமதிகள் மீது 44% பரஸ்பர வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா கூறியமை, நடைமுறைக்கு வந்தால், அது, இலங்கையில் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும்.
அத்துடன், வறுமையை நிச்சயமாக அதிகரிக்கும் என்றும் பிரேமதாச குறிப்பிட்டார். இந்தநிலையில், ஏப்ரல் 09ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் 44% வரிகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு திட்டத்தை உருவாக்க குழு ஒன்றை நியமித்த அரசாங்கத்தின் நடவடிக்கையை அவர் விமர்சித்துள்ளார்.
மெய்நிகர் சந்திப்புகளுக்குப் பதிலாக, அமெரிக்காவுடன் நேருக்கு நேர் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |