பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவிற்கு சஜித் இரங்கல்
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் (Pope Francis ) மறைவுக்கு எதிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இயேசு காட்டிய பாதையை அங்கீகரித்து, திருத்தந்தை பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கிய தலைமைத்துவம் இது சமூகத்திற்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்தது.
இரங்கல்
நல்ல உலகம் அமைய விரும்புவோருக்கு அவருடைய பரலோக பிரசன்னம் பேரிழப்பு.அவருடைய எளிமையான வாழ்க்கை காட்டிய பாதையை நன்கு அறிந்துகொள்வதே அவருக்கு செய்யக்கூடிய உண்மையான மரியாதையாகும்.
மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் ஆத்மா இறைவனின் இல்லத்தில் இளைப்பாற வேண்டுகிறோம்.
அவர் பரலோகத்திற்கு செல்வது ஒரு சிறந்த உலகத்திற்காக ஏங்கும் அனைவருக்கும் ஒரு பெரிய இழப்பு.
அவரை உண்மையிலேயே கௌரவிப்பது, அவரது தாழ்மையான வாழ்க்கையால் ஒளிரும் பாதையை தெளிவாக அடையாளம் கண்டு பின்பற்றுவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் இன்று (21) காலை தனது 88 ஆவது வயதில் காலமானார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
