சிங்கப்பூர் முன்னாள் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் நெருக்கமான கலந்துரையாடல்

Sajith Premadasa Sri Lanka Politician Singapore
By Rakesh Jan 28, 2026 04:39 AM GMT
Report

ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சிங்கப்பூரின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ-யோங்-பூனைச் சந்தித்துள்ளார்.

சிங்கப்பூரில் அமைந்துள்ள லீ குவான் யூ பொதுக் கொள்கைகள் கற்கைகள் நிறுவகத்திலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஆளும் தரப்புடன் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த - கோட்டாபய - மைத்திரி

ஆளும் தரப்புடன் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த - கோட்டாபய - மைத்திரி

உலகளாவிய தொழில்நுட்ப, பொருளாதார மாற்றங்கள்

முற்போக்கான தலைமைத்துவம், வலுவான நிறுவனங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையிலான கொள்கை உருவாக்கம் மூலம் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகியவற்றின் தாக்கம் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு சிங்கப்பூர் எவ்வாறு வெற்றிகரமாகத் தகவமைத்துக் கொண்டது என்பது குறித்து இந்தக் கலந்துரையாடலில் இருதரப்பினரும் பிரதானமாக கவனம் செலுத்தினர்.

சிங்கப்பூர் முன்னாள் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் நெருக்கமான கலந்துரையாடல் | Sajith Close Discussions Former Singapore Minister

தனிப்பட்ட பிம்பத்தின் மீது மட்டும் சார்ந்து இல்லாமல் ஈடுகொடுக்கும் கட்டமைப்புகள் மற்றும் பொறிமுறையாள்கைகளை உருவாக்குவதில் சிங்கப்பூரின் அனுபவங்களிலிருந்து நாட்டுக்குப் பாடங்கள் கற்பதன் முக்கியத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வலியுறுத்தினார்.

சிங்கப்பூரின் அனைவரையும் உள்ளடக்கிய தேசிய அடையாளம் மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நீண்டகால மூலோபாயத் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான அதன் இயலுமை குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டன. 

சிங்கப்பூர் அமைச்சரவையில் இரண்டு தசாப்தங்கள்

அவ்வாறே, தேசிய பேரிடர்கள் மற்றும் பொருளாதார அதிர்ச்சிகளின் தாக்கங்களை உள்ளடக்கியவாறு இலங்கை சமீப காலங்களில் பல பொருளாதார மற்றும் மனிதாபிமான சவால்களை எதிர்கொண்ட விதம் குறித்து ஜார்ஜ் இயோ பூனுக்கு விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நிறுவன ஆற்றலை வலுப்படுத்துதல், ஏற்றுமதி சந்தைகளைப் பன்முகப்படுத்துதல், வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் வெளிநாட்டுப் பொருளாதார உறவுகள் போன்ற துறைகளில் விசேட நிபுணத்துவ வாண்மையை முன்னேற்றுவதன் அவசியம் என்பனவற்றையும் எடுத்துரைத்தார்.

சிங்கப்பூர் முன்னாள் வெளிவிவகார அமைச்சருடன் சஜித் நெருக்கமான கலந்துரையாடல் | Sajith Close Discussions Former Singapore Minister

மேலும், இச்சந்திப்புக்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க, முன்னாள் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் ஜார்ஜ் இயோ-பூன், பொதுக்கொள்கை முடிவெடுப்பதற்கான எதிர்கால பன்முக பங்குதாரர் பட்டறைகள் மூலம் இலங்கையுடன் நேரடியாகத் தொடர்புபட்டு, சிங்கப்பூரின் அரசாளுகை, பொருளாதார முன்னுதாரண மாற்றம், வெளியுறவுக் கொள்கையின் மூலோபாயம் மற்றும் தொழில்நுட்ப தடைகளை முகாமைத்துவம் செய்வதில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு இணக்கம் தெரிவித்தார்.

ஜார்ஜ் இயோ, சிங்கப்பூர் அமைச்சரவையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகச் சேவையாற்றியுள்ளதோடு, தகவல் மற்றும் கலை விவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட பல முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

இவரது இராஜதந்திரம் மற்றும் பொதுக் கொள்கைக்கான பங்களிப்புகளுக்காக தலைசிறந்த இராஜதந்திரியாகவும், மூலோபாய சிந்தனையாளராகவும் சர்வதேச அளவில் பரவலாக மதிக்கப்படும் ஒருவராகவும் இவர் திகழ்ந்து வருகின்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு..

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு..

1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US