சஜித்தின் பிடிவாத அரசியல் நாட்டை கொடூர ஆட்சியில் இருந்து மீட்க உதவாது: முஸம்மில்
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் பிடிவாத அரசியல் நாட்டை கொடூர ஆட்சியிலிருந்து மீட்க உதவாது எனத் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் நேற்று (15) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார்.
“எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசாவின் பிடிவாத அரசியலால் இந்த கொடூரமும்
கோமாளித்தனமும் கொண்ட அரசியலைக் கவிழ்த்த முடியாது.
அவரின் அணியினரும் இந்த விடயத்தில் அதிருப்தி கொண்டுள்ளனர்.
கடந்த இரண்டு
நாட்களுக்கு முன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இவரை
சந்தித்து ஒரு சரியான ஆலோசனைகளை வழங்கி இருந்த போதும் அதையும் இவர் சரி வர
ஏற்காத நிலையைக் கண்டு அவரின் அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை
தெரிவித்துள்ளார்கள்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.