இலங்கையில் விரைவில் மிகப் பெரும் பஞ்சம் - சஜித் எச்சரிக்கை
மிகப் பெரிய பஞ்சம் மற்றும் பாரிய பொருளாதார வீழ்ச்சியின் முன்னறிவிப்பு கண்ணெதிரில் இருக்கிறது. அரசாங்கம் தரகு பணம் பெறும் திட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் மக்களின் உயிர்களுடன் விளையாடி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
"மக்களுக்கு தேவை வாழ்க்கைக்கான பாதையே தவிர நடக்கும் பாதைகள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றும் பாதை, விவசாயிகளின் தொழிலை கட்டியெழுப்பும் பாதை மற்றும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களின் வாழ்வுக்கான பாதையை உருவாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் மருத்துவ உதவிகளை வழங்கிய பின்னர் கருத்து வெளியிடும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan