பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியை சந்தித்தார்
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா (Sahir Shamshad Mirza) இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள நீண்டகால நெருங்கிய உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா உள்ளிட்ட குழுவினருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
இச்சந்திப்பை குறிக்கும் வகையில் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கியுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் பாகிஸ்தான் கடற்படையின் ரியர் அட்மிரல் அப்துல் பாஸித் பட் (Rear Admiral Abdul Basit Butt) உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
