நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இந்தியாவின் புனித தாதுக்கள்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித தாதுக்கள் இந்திய அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையுடன் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
குறித்த புனித தாதுக்கள் இன்று (4.2.2026) பிற்பகல் 1 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.
இவை இன்று மாலை கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படவுள்ளன.
விசேட போக்குவரத்து ஏற்பாடு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் புனித தாதுக்கள் தரிசனம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

நாளை(5) முதல் எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களுக்கு இந்த புனித தாதுக்களை தரிசிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும்.. நிலாவிடம் கண்கலங்கிய சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri