சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் தொடர்பில் ஆராய மூவரடங்கிய விசாரணைக்குழு
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் ஆராய மூவர் அடங்கிய விசாரணைக்குழுவொன்றை பல்கலைக்கழக நிர்வாகம் நியமித்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு கற்று வந்த புசல்லாவை பிரதசத்தைச் சேர்ந்த 23 வயதான சரித் தில்சான் எனும் மாணவர் கடந்த 29ம் திகதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்துக்கொண்டுள்ளார்.
மூவரடங்கிய விசாரணைக்குழு
பகிடிவதை காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதனையடுத்து உயர்கல்வி அமைச்சு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றை நியமித்திருந்தது.
தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பிலும் அதன் சிரேஷ்ட பேராசிரியர் ஒருவர் தலைமையில் மூவரடங்கிய விசாரணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வாக்குவாதம்.. பாடகர் மனோவிடம் சசிகுமார் சொன்ன அந்த வார்த்தை Cineulagam
