சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை மரணம்: உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு
சபரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை சம்பவம் தொடர்பில், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
சபரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரான சரித் தில்சான் சம்பந்தப்பட்ட பகிடிவதை சம்பவம் அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக, குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அடிப்படை உரிமைகள் மனு
இந்தநிலையில், விரிவான விசாரணை நடத்தப்பட்டு, பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.
அத்துடன் பல்கலைக்கழகங்கள் உட்பட அரசு கல்வி நிறுவனங்களில், பகிடிவதைக்கு எதிரான ஒரு திட்டத்தை வகுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
