பல்கலைக்கழகங்கள் குறித்து உயர் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்
ஒவ்வொரு அரச பல்கலைக்கழகத்துக்கும் மாணவர்களைத் தண்டிப்பதற்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் புதிய அதிகாரங்களுடன் கூடுதல் அதிகாரி ஒருவரை நியமிக்க, உயர் கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக பகிடிவதை சம்பவங்களை கையாளும் பொறுப்புக்கு நியமிக்கப்படவுள்ள, இந்த அதிகாரி, பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் இருப்பார்.
பகிடிவதை விடயங்களை கையாள..
விடுதிப் பொறுப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், வளாகத்தில் இருந்தாலும், முறைப்பாடுகள் வரும்போது நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு முழு நிர்வாக அதிகாரம் இல்லை என்று பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் கபில செனவிரத்ன கூறியுள்ளார்.
எனவேதான் தமது ஆணைக்குழுவும் உயர்கல்வி அமைச்சகமும், பகிடிவதை விடயங்களை கையாள ஒரு உறுதியான, நேரடி அதிகாரியை விரும்பியதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இதற்காக நேரடி ஒழுங்கு அதிகாரம் கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும்
மாணவர்களின் தவறான செயல்களுக்கு நடவடிக்கை எடுத்து தண்டிக்க சபை உறுப்பினர்களுக்கு பொதுவான அதிகாரம் உள்ளது. ஆனால் பகிடிவதை பிரச்சினையில், ஒருபோதும் அந்த அதிகாரம் இல்லை என்றும் பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் கபில செனவிரத்ன கூறியுள்ளார்.
இதேவேளை, சபரகமுவ பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு பொறியியல் தொழில்நுட்ப மாணவரான சரித் தில்ஷானின் தற்கொலை, பகிடிவதை தொடர்பானதா இல்லையா என்பது குறித்து சுயாதீன விசாரணை நடத்த, சபரகமுவ பல்கலைக்கழகத்துக்கு ஒரு சிறப்பு குழுவை, மானிய ஆணைக்குழு நேற்று அனுப்பியுள்ளது.
இதற்கிடையில், உயர்கல்வி அமைச்சகம் அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களையும் கொழும்புக்கு வரவழைத்து, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் ஒரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
