இலங்கையின் கடன் மறுசீரமைப்பு : தொடர் பரிசீலனையில் சர்வதேச நாணய நிதியம்
நீண்ட கடன் மறுசீரமைப்பு செயல்முறை ஜூலை மாதத்திற்குள் முடிவடையும் என்பது குறித்து இலங்கை நம்பிக்கையுடன் உள்ளதாக சர்வதேச நாணயம் நிதியம் (International Monetary Fund) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், தொடர்புடைய தரப்பினருடன் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை இன்னும் மதிப்பீடு செய்து வருவதாக நாணய நிதியம் கூறியுள்ளது.
விதிமுறைகள்
தமது குழு, கடன் மறுசீரமைப்பின் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிமுறைகளையும் அவை, தங்கள் திட்டத்தின் அளவுருக்களுடன் ஒத்துப்போகிறதா என்பதையும் மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
எனவே, அந்த மதிப்பீடு முடிந்ததும், அதைப் பற்றிய தமது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஜூலி கோசாக் வோஷிங்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
