ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை: திஸாநாயக்க எம்.பி. நம்பிக்கை
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்ாகன முயற்சி வெற்றியளிக்காது என தான் நம்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க(S. B. Dissanayake) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் தெரிவித்ததாவது, "அரசமைப்பினர் பிரகாரம் செப்டெம்பர், ஒக்டோபர் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தலாம்.

அவ்வாறு இல்லாவிட்டால் 113 எம்.பிக்கள் இணைந்து யோசனையொன்றை வழங்கினால் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம்.
இது ஒரு சவாலுக்குரிய விடயம். எனவே அந்த முயற்சி கைகூடாது என்றே கருதுகின்றேன்.

அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சி ஐக்கியமாகவே முடிவெடுக்க வேண்டும். கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்" என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri