பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு 8 வருட சிறைத்தண்டனை
மொனராகலையில் 49 வயதான பாடசாலை ஆசிரியை ஒருவருக்கு 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
14 வயது மாணவன் ஒருவனுக்கு எதிரான தகா நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பிலான மூன்று குற்றச்சாட்டுக்களில் குற்றவாளியாக ஆசிரியை அறிவிக்கப்பட்டுள்ளார்.
மொனராகலை மேல் நீதிமன்ற நீதிபதியினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்போது, நீதிமன்றத்தால் 50,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
8 வருட சிறைத்தண்டனை
அத்துடன் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பாதிக்கப்பட்டவருக்கு 250,000 ரூபாய் வீதம் மொத்தமாக 750,000 ரூபாய் நட்டஈட்டை செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சம்பவத்துடன் தொடர்புடைய வழங்கிற்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை மாணவனை பாடசாலையில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்து சென்று தகா செயற்பாட்டுக்கு உட்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இரு பிள்ளைகளின் தாயாரும், ஆசிரியைக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கமைய, இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.