கட்சியில் இருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் இணைப்போம்: எஸ். பி திஸாநாயக்க பகிரங்கம்
கட்சியில் இருந்து விலகிய அனைத்து உறுப்பினர்களையும் மீண்டும் இணைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க(S. B. Dissanayake) தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்கானலில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் “கட்சியின் பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு அமைய அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பான விடயம் தீர்மானிக்கப்படும்.
ரணில் விக்கிரமசிங்க
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச தரப்பை வேட்பாளராக நிறுத்துவதா அல்லது அவர்களை தவிர ஏனைய மொட்டுக்கட்சியின் உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதா என்பது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன.
மேலும் ரணில் விக்கிரமசிங்கவை பொதுவேட்பாளராக நியமிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானங்களும் கட்சி சார்பாக மேற்கொள்ளப்படவில்லை.
பொதுஜன பெரமுன வேட்பாளரா அல்லது பொது வேட்பாளரா என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |