பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வரும் ருவான் விஜேவர்தன?
ஐக்கிய தேசியக் கட்சியை வலுப்படுத்தக்கூடிய ஒருவருக்கு தனது பிரதித் தலைவர் பதவியை கையளித்து விட்டு, தான் அந்த பதவியை இராஜினாமா செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற செயற்குழுக்கூட்டத்தின் போதே அவர் தனது முடிவினை அறிவித்துள்ளதாகவும் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் சூழ்நிலையில்,கட்சி உறுப்பினர்கள் பல பிரிவுகளாக பிரிந்திருக்கக்கூடாது எனவும்,கட்சியிலுள்ள அனைவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு, கட்சியை வலுவாக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், கட்சித்தலைவரை சூழவுள்ள சிலர் மாத்திரமே கட்சிக்குள் உள்ளதாகவும் கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri