தனிப்பட்ட தேவைக்காக மரங்கள் வெட்டப்பட்டதா..! சமரா சம்பத் குற்றச்சாட்டிற்கு ருவான் ரணசிங்க மறுப்பு
எல்ல விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமரா சம்பத் தசநாயக்கவுக்கும் பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்கவுக்கும் இடையில் கடும் வாதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(23.11.2026) உரையாற்றும் பொழுதே மேற்கண்டவாறு வாதம் வெடித்துள்ளது.
இதன்போது, எல்ல பிரதேச சபையின் உப தவிசாளருக்குச் சொந்தமான விருந்தகத்தின் காட்சிக்கு மரங்கள் தடையாக இருந்ததால் அவை வெட்டப்பட்டதாக சாமர சம்பத் தசநாயக்க முன்னதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தனிப்பட்ட இலாபத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டதா..
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, குறித்த மரங்கள் பழமையானவை என்றும், புயல் காலங்களில் அவை முறிந்து வீழ்ந்து மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருந்தமையாலேயே அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், தாம் மரியாதையுடனேயே இந்த விடயத்தை எழுப்பியதாகக் குறிப்பிட்ட சாமர சம்பத் தசநாயக்க, பிரதி அமைச்சர் முன்னர் எல்ல பகுதியில் வசித்து வந்துள்ளார் என்றும், தற்போது கொழும்புக்கு இடம்பெயர்ந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவருடைய பிள்ளைகள் தற்போது கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயின்று வருவதாகலும் சாமர குறிப்பிட்டுள்ளார்.
இதனால் அதிருப்தியடைந்த பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியாது என சாமரவை எச்சரித்துள்ளார்.
மேலும், குறித்த கருத்துகளை நாடாளுமன்ற உரையில் இருந்து நீக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.