விராட் கோலியின் சாதனையை முறியடிக்க உள்ள இளம் வீரர்: எதிர்பார்ப்புடன் ரசிகர்கள்
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெறும் ஐந்தாவது ரி-20 போட்டியில் விராட் கோலியின் ரி-20 சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் நான்கு போட்டிகளில் மொத்தமாக 213 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவருக்கு விராட் கோலியின் சாதனையை முறியடிக்க 19 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்படுகின்றது.
அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர்
இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்களாக 2021இல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடரின் போது விராட் கோலி 231 ஓட்டங்கள் பதியப்பட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் கேஎல் ராகுல் 2020ல் நடந்த இருதரப்பு போட்டியின் போது நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து ரி-20 போட்டிகளில் 224 ஒட்டங்கள் அடித்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், 213 ரன்களுடன் உள்ள ருதுராஜ் கெய்க்வாட் ஐந்தாவது போட்டியில் 19 ஓட்டங்கள் எடுத்தால் இருவரையும் பின்னுக்குத் தள்ளி, அதிக ஓட்டங்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்கில் மையம் கொண்டுள்ள புயல்: மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை - செய்திகளின் தொகுப்பு (Video)

காசா மீது மீண்டும் இஸ்ரேல் உக்கிரத் தாக்குதல்: நூற்றுக்கணக்கில் பலியான மக்கள் - நிராகரிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கோரிக்கை

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
