இனப்பிரச்சினைக்கு தீர்வளிக்கும் ஆணைக்குழுவின் முக்கியத்துவத்தை விளக்கிய அலி சப்ரி
பாதிக்கப்பட்ட சமூகங்கள் மீதான இனப்பிரச்சினையின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்கு உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவுவதன் முக்கியத்துவத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆணைக்குழு சுதந்திரமாக செயற்பட வேண்டும் என்றும், தேவையான ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குவதுடன் அரசாங்கத்தின் பங்கு மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முழுமையான விசாரணை
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பொறுப்புக்கூறல் செயற்பாட்டின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சர், அத்தகைய பொறிமுறையை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கிறது.
அத்துடன் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்த அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்.
மூன்று தசாப்த கால யுத்தத்தினால் நாடு முழுவதிலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே முழுமையான விசாரணைகள் அவசியமானதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னைய ஆணைக்குழுக்களின் முன்மொழிவுகள் போதியளவு நடைமுறைப்படுத்தப்படாமை காரணமாகவே தென்னாபிரிக்கா போன்ற நாடுகளின் மாதிரிகளை இலங்கை பரிசீலிக்க வேண்டியேற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





Foot Massge: வெறும் 5 நிமிடம் பாதங்களை மசாஜ் செய்து பாருங்க... இந்த பிரச்சினைகள் கிட்டவே வராது! Manithan
