ரஸ்யா இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தினால், பதிலடியை வெளியிட்ட அமெரிக்கா மறுப்பு! (காணொளி)
இதற்கு முன்னர் நேட்டோ அமைப்பு, ஒருபோதும் இந்தளவு ஒற்றுமையாக இருந்ததில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
பிரசல்ஸில் ஜி7 நாடுகளின் தலைவர்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
மொஸ்கோவின் மீது பொருளாதாரத் தடைகள் நீண்ட காலம் நீடிக்கும் வகையில் ஒற்றுமையைத் தொடருமாறு அவர் ஜி7 நாடுகளை வலியுறுத்தினார்.
இந்தநிலையில் பிடென், இங்கிலாந்தின் ஜான்சன் மற்றும் பிரான்சின் மேக்ரான் ஆகியோர் ரஸ்யா, உக்ரைனில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால் எவ்வாறு பதிலளிக்கப்படும் என்பதை கூறுவதற்கு ஜோ பைடன், இங்கிலாந்தின் ஜோன்சன் மற்றும் பிரான்ஸின் மெக்ரோன் ஆகியோர் எதனையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ஆனால், பயன்படுத்தப்படும் இரசாயன ஆயுதங்களின் தன்மையைப் பொறுத்தே அமெரிக்காவின் பதிலின் தன்மை அமையும் என்று பைடன் கூறியுள்ளார்
இதேவேளை ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு மொத்தம் 40,000 துருப்புக்களைக் கொண்ட நான்கு புதிய போர்க்குழுக்கள் அனுப்பப்படும் என்று நேட்டோ உறுதிப்படுத்தியுள்ளது.
ருஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனிய துறைமுக நகரமான பெர்டியன்ஸ்கில் ரஸ்யாவின் தரையிறங்கும் கப்பல் அழிக்கப்பட்டது மற்றும் இரண்டு கப்பல்கள் சேதமடைந்துள்ளன என்று உக்ரைன் அதிகாரிகள் கூறுகின்றனர்.
10 உக்ரைனியர்கள் 10 ரஸ்யர்கள், கைதிகள் பரிமாற்ற அடிப்படையில் பரிமாறிக்கொள்ளப்பட்டதாக உக்ரைன் கூறுகிறது.
இதன்படி, ஒடேசாவில் மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 11 ரஸ்ய மாலுமிகளும், ரஸ்யர்களால் கைப்பற்றப்பட்ட கப்பலில் இருந்து 19 உக்ரைனிய கடற்படையினரும் பரிமாறிக்கொள்ளப்பட்டனர்.


